திருவாரூரில் பெய்த கனமழை...  2000 ஆண்டுகள் பழமையான கமலாலய தீர்த்த குளத்தின் ஒருபக்க சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது!

0 3686

திருவாரூரில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள  2000 ஆண்டுகள் பழமையான கமலாலய தீர்த்த குளத்தின் ஒருபக்க சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் நகராட்சி அலுவலகம் மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரே உள்ள கமலாலய குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து குளத்திற்குள் விழுந்தது.

மேலும் அருகிலுள்ள சுவர் உள்வாங்கியுள்ளதோடு, சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments