ரிக்சா வண்டி ஓட்டுநருக்கு ரூ.3 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

0 3365

உத்தரப்பிரதேசத்தில் ரிக்சா வண்டி ஓட்டுநருக்கு 3 கோடி ரூபாய் வரியாகச் செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பகல்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் சிங் என்பவர் அதே பகுதியில் ரிக்சா வண்டி ஓட்டி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசில் 3 கோடி ரூபாய் வரை வரி பாக்கி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரதாப் சிங், காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் பிரதாப் சிங்கின் பான் அட்டை மூலம் யாரோ ஒருவர் ஜிஎஸ்டி எண்ணைப் பெற்று தொழில் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments