நடுவானில் பாராகிளைடிங் செய்தபோது ஒருவரோடு ஒருவர் மோதி திடீர் விபத்து... கடலில் விழுந்த வீராங்கனை!

0 2589

துருக்கியில் வான்சாகச விளையாட்டுக்களில் இரண்டு பாராகிளைடர்கள் வானில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.

துருக்கியின் ஒலுடனிஸ் கடற்கரைப் பகுதி உலக அளவில் வான் சாகச விளையாட்டுக்களுக்குப் பெயர் பெற்றது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் விளையாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். வான்குடையில் பறந்து சாகசம் செய்த இருவர் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டதில் காயமடைந்தனர்.

கடலோரக் காவல்படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு பாராகிளைடர் தண்ணீரில் இறங்கிய நிலையில் அதிலிருந்த உக்ரைனியப் பெண்ணையும் உடனடியாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments