குறிப்பிட்ட சாராரின் மனதைப் புண்படுத்துவதாக புகார்... ஆஷ்ரம் 3 படப்பிடிப்பு தளத்தை அடித்து நொறுக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்

0 2670

குறிப்பிட்ட சாராரின் மனதைப் புண்படுத்தும்படி இணையத் தொடர் எடுத்த இயக்குநர் மீது பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

ஆஷ்ரம் 3 என்ற இணையத் தொடரை தயாரித்து இயக்கி வருபவர் பிரகாஷ் ஜா. இந்தத் தொடர் குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி இருப்பதாகக் கூறி பஜ்ரங் தள் அமைப்பினர் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் போராட்டம் நடத்தினர். அப்போது படப்பிடிப்பு நடந்த தளத்தையும், வாகனங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். 

இணையத் தொடர் இயக்குநர் பிரகாஷ் ஜா மீதும் அவர்கள் மையை ஊற்றி தாக்கினர். இந்த நிகழ்வு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments