தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனத் தகவல்

0 4713

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் நாளை கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments