பேத்துப்பாறை வயல் பகுதியில் பாயும் காட்டாற்று வெள்ளம்: ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி கரையை கடக்கும் கிராம மக்கள்!

0 1747

கொடைக்கானல் பேத்துபாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து வரும் நிலையில் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி ஆபத்தான முறையில் மலைக்கிராம மக்கள் கரையை கடந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சில்வர் பால்ஸ், புலிச்சோலை உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் பாய்வதால் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி மலைக் கிராம மக்கள், விவசாயிகள் கரையை கடந்து வருகின்றனர்.

மழைக்காலத்தின் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் தடுப்பணையுடன் கூடிய ஆற்றுப்பாலத்தை மாவட்ட நிர்வாகம் அமைத்து தர வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments