உ.பி.யில் இன்று 9 மருத்துவக் கல்லூரிகளை ஒரே நேரத்தில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

0 1834

பிரதமர் மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை ஒரே நேரத்தில் திறந்து வைக்கிறார்.

அம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல்களம் விறுவிறுப்படைந்துள்ளது. இந்நிலையில், 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

காஜிப்பூர், மிர்சாப்பூர், ஹர்தோய் உள்ளிட்ட 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை சித்தார்த் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார். பிற்பகலில் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா என்ற சுகாதாரக் கட்டமைப்பை ஊக்குவிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments