பாஜக ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது - அமைச்சர் அமித்ஷா

0 1805

பிரதமர் மோடியின் முயற்சியால் ஜம்மு காஷ்மீருக்கு12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு வந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டில் 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஐஐடி ஜம்முவின் புதிய வளாகத்தை திறந்து வைத்ததுடன், மருத்துவக் கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் 3 குடும்பங்களின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டதாக தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை மறைமுகமாகச் சாடினார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்திருப்பதாக அமித்ஷா தெரிவித்தார். பயங்கரவாதம் முற்றிலும் முடிவுக்கு வரும் சூழ்நிலையை உருவாக்க விரும்புவதால் அதுவரை திருப்தி அடைய முடியாது என்று குறிப்பிட்டார். காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் மற்றும் மோசமான வடிவமைப்புகளை முறியடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக ஜம்முவில் உள்ள மக்வால் என்ற இடத்தில் உள்ளூர் மக்களுடன் உரையாடிய அமித்ஷா, டிஜியானா குருத்வாராவில் பிரார்த்தனை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments