பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி 2 ரவுடிகள் கொலை.. புதுவையில் பயங்கரம்..!

0 3248

புதுச்சேரியில் ரௌடிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு, மர்ம நபர்கள் அரிவாளுடன் அவர்களைத் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வாணரப்பேட்டையை சேந்த பாம் ரவியும் அவரது நண்பன் அந்தோணி ஸ்ரீபனும் பைக்கில் அலோன் வீதி-ராஜராஜ வீதி சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாம் ரவியும் அந்தோணி ஸ்ரீபனும் இருசக்கர வாகனத்தில் வரும் தெருவில் எதிர் திசையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வரும் மர்ம நபர்கள், இருவர் மீதும் முதலில் நாட்டு வெடிகுண்டை வீசுகின்றனர். அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து, ஓடத் தொடங்கியதும் அரிவாளத் தூக்கியவாறு துரத்திச் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments