வட கிழக்கு தைவானில் நிலநடுக்கம்-கட்டடங்கள் குலுங்கும் காட்சி

0 2205

வட கிழக்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு தைவானின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், 1999 ஆம் ஆண்டில் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேப்போல், 2016 ஆம் ஆண்டு தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments