மரக்காணம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் நல்லூர் கண்ணன் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்

0 1704

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் நல்லூர் கண்ணன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

மரக்காணம் ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தயாளன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து மத்திய ஒன்றிய பொறுப்பாளர் நல்லூர் கண்ணன் போட்டியிட்டார்.இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி, நல்லூர் கண்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாரத்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments