பட்டப்பகலில் 2 ரவுடிகள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை

0 2433
பட்டப்பகலில் 2 ரவுடிகள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை

புதுச்சேரியில் பட்டப்பகலில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இரண்டு ரவுடிகள் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணரப்பேட்டையை சேந்த பாம் ரவி மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவலையில் உள்ளது. பாம் ரவியும் அவரது நண்பன் ஃபரீத்தும் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இருவர் மீதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது.

பின்னர் அவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனங்களில் அந்த கும்பல் தப்பியோடியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக ரவுடிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments