தீபாவளிக்கு பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் வரலாம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

0 3660

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி அரியமங்கலம் லட்சுமி மழலையர் பள்ளியில் நடைபெற்ற கொரோனா பாதிப்பு குறித்த ஓவியக் கண்காட்சியை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள்  பள்ளிக்கு   கட்டாயம் வரவேண்டும் என்பதில்லை.

தீபாவளிக்கு பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தீபாவளிக்கு பிறகு வரலாம். மாணவர்கள் காலை எழுவது, உணவருந்துவது, பள்ளிக்கு வருவது போன்ற ஒழுக்க நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகள் திறக்கப் படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments