சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது..!

0 1834

கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் உட்பட இருவரை போலிசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு கடந்த 21-ம் தேதி சிகரெட் வாங்குவது போல் சென்ற மர்ம நபர் கடையில் இருந்த தனலட்சுமி என்பவரின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றான்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது, கரும்புக்கடை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் பைசல் ரஹ்மான் என்பது தெரியவந்துள்ளது. பைசல் ரஹ்மான் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments