மனைவி இறந்த துக்கம் தாளாமல் நான்கு பிள்ளைகளை கொன்றுவிட்டு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஷமருந்தி தற்கொலை

0 2394

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் மனைவி இறந்த துக்கம் தாளாமல், 4 பிள்ளைகளை கொன்றுவிட்டு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போரக்கல் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கோபால் - ஜெயஸ்ரீ தம்பதிக்கு சௌமியா, சுவேதா, சாக் ஷி,சுர்ஜன் என்ற நான்கு பிள்ளைகள் இருந்தனர்.

கடந்த ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ குணமடைந்து வீடு திரும்பிய சில நாட்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட கோபால், 4 பிள்ளைகளையும் தனி ஒரு ஆளாக எப்படி வளர்ப்பது என அக்கம்பக்கத்தினரிடம் கூறி புலம்பி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், நான்கு பிள்ளைகளுக்கும் குடிக்க கொடுத்து கொன்றுவிட்டு, தானும் விஷம் கலந்த தண்ணீரை குடித்து கோபால் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments