வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் ; இருவர் கைது

0 3166
வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலம் உமிழும் அம்பர்கிரிஸை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அம்பர்கிரிஸ் நடுக்கடலில் ஆங்காங்கே மிதப்பதும், சில இடங்களில் கரை ஒதுங்குவதும் உண்டு. இது மருந்து மற்றும் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுவதால் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் வரை விலை போகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்துப்பேட்டை வழியாக வெளிநாடுகளுக்கு அம்பர்கிரிஸ் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், உப்பூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 8 கிலோ அம்பர்கிரிஸ் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனை துபாய் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றும் தெரியவந்தது. ஜாகிர் உசேன், நிஜாமுதீன் இருவரையும் கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments