மனைவி,கைக்குழந்தையுடன் இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய நபர்-நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள்

0 4526

புதுச்சேரியில் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி, நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கல்மண்டபம் கிராமத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற பேருந்தை இருசக்கர வாகனத்தில், மனைவி, குழந்தையுடன் சென்ற நபர் முந்திச் செல்ல முயன்றார்.

அப்பொழுது, எதிர்திசையில் இருந்து மற்றொரு பேருந்து வந்த நிலையில், இரு பேருந்துகளுக்கும் இடையே அந்த இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டது. இதில் இருசக்கர வாகனம் மட்டும் சேதமான நிலையில், அதில் இருந்த மூவரும் நூலிழையில் உயிர்தப்பினர்.

இதனை அடுத்து, தனது கணவரை கடிந்து கொண்டபடியே மனைவி கைக்குழந்தையுடன் நகர்ந்து சென்றார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர், எதிர்திசையில் வந்த பேருந்தின் வேகத்தை கணிக்காமல் முந்த முயன்றதை அடுத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும், எதிர்திசையில் இருந்து வந்த பேருந்து, வேகத்தை குறைத்ததை அடுத்து விபத்து தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments