லக்கிம்பூர் வழக்கில் சிறையில் இருந்த ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல்

0 1786

க்கிம்பூர் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்துச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

லக்கிம்பூர் படுகொலை தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா உட்பட மொத்தம் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து ரத்த மாதிரி எடுத்துச் சோதித்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிஷ் மிஸ்ராவைச் சிறைச்சாலையில் இருந்து மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments