மருதுபாண்டியர்களின் 220வது நினைவு தினம் - அரசு சார்பில் மரியாதை

0 1700
மருதுபாண்டியர்களின் 220வது நினைவு தினம் - அரசு சார்பில் மரியாதை

வெள்ளையர்களை எதிர்த்து தீரத்துடன் போர்புரிந்த மருதுபாண்டியர்களின் 220வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிராக 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்று திரட்டியதற்காகவும், கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தததாகவும் கூறி ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்டனர்.

அவர்களின் வாரிசுகள், குடும்பத்தினர் என சுமார் 500 பேர் திருப்பத்தூர் கோட்டை முன்பு தூக்கிலிடப்பட்டனர். இந்நிலையில் திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவர்களது திருவுருவ சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments