தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2844
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளைய தினம் புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நாளை மறு நாள் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments