மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி. பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் ; மருத்துவ கல்வி இயக்கம்

0 5038
மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி. படிப்புகளில் சேருவதற்கான விண்னப்பம்

மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி. பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராபி, ரேடியோ தெரபி டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, கிளினிக்கல் நியூட்ரிசியன் போன்ற பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை www.tnhealth.tngov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 8-ந் தேதி வரை விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10-ந் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments