கல்யாணப் பத்திரிக்கை வைக்க வந்துள்ளதாக கூறி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கைவரிசை

0 1776
கல்யாணப் பத்திரிக்கை வைக்க வந்துள்ளோம் எனக் கூறி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கைவரிசை

சென்னை அடுத்த தாம்பரத்தில் கல்யாண பத்திரிகை வைக்க வந்திருப்பதாக கூறி வீட்டுக்குள் புகுந்த இருவர், தனியாக இருந்த இளம்பெண்ணின் கை, கால்களை கட்டி, பணம், நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

அகரம்தென் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர்கள் ரவி - சுகுணா தம்பதி. இருவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் அவர்களது 19 வயது மகள் புஷ்பலதா மட்டும் இருந்திருக்கிறார்.

இதனையறிந்த மர்ம நபர்கள் இருவர், தாங்கள் தூரத்து உறவினர்கள் என்றும் கல்யாண பத்திரிக்கை வைக்க வந்திருப்பதாக கூறி வீட்டுக்குள் புகுந்து, குடிக்க தண்னீர் கேட்டதாக கூறப்படுகிறது.

புஷ்பலதா தண்ணீர் எடுக்க சென்ற நேரம் பார்த்து, இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டி போட்டதோடு, சத்தம் போடக் கூடாது என்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்து, பீரோவில் இருந்த ஏழு சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

நகை, பணத்தை திருடிவிட்டு, இளம்பெண்ணின் கை, கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments