வனப்பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த குட்டியானை ; தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்

0 1422
பத்திரமாக மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை

கேரள வனப்பகுதியில் தாயை பிரிந்த, பிறந்து ஆறு மாதமே ஆன குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டிய மலப்புரம் மாவட்டத்திலுள்ள வழிக்கடவு வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆறு மாதம் மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

தாயை பிரிந்த சோகத்தில் அங்கு சுற்றித்திரிந்த குட்டியானை, அப்பகுதி மக்களையும் விரட்டியுள்ளது. இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குட்டியானையை மீட்டு, அதே பகுதியில் அதன் தாய் இருப்பதை கண்டறிந்து தாயுடன் சேர்த்து வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments