கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிய மருத்துவமனை திறப்பு

0 8388
கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிய மருத்துவமனை

கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரி வளாகத்தில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

300 மாணவர்கள் மருத்துவம் படித்து வரும் இந்த கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 750 படுக்கை வசதி மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை கேஎம்சிஎச் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் என டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments