கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு செல்லும் பாதையில் மண் சரிவு.. போக்குவரத்து துண்டிப்பு - பொதுமக்கள் அவதி

0 2024

கனமழை காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு செல்லும் மாற்று பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு பெய்த கன மழையால் அடுக்கம், கும்பக்கரை வழியாக பெரியகுளம் பகுதிக்கு செல்லும் மலைச்சாலையில் மண் சரிவும் சில இடங்களில் பாறைகளும் சரிந்து விழுந்தன. இதனால் அவ்வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுக்கம், பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே அதிகாரிகள் மண் சரிவை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments