தாதா சாகேப் பால்கே விருது வாங்குவதற்காக நடிகர் ரஜினி டெல்லி பயணம்

0 2917

இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விருது வழங்கும் விருது விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில், வருகிற 25-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை போயஸ் கார்டனில் இருந்து டெல்லி புறப்பட்ட ரஜினிகாந்த், தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தாதா சாகேப் விருது பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய ரஜினிகாந்த், இந்த நேரத்தில் இயக்குநர் கே பாலச்சந்தர் இல்லாதது தமக்கு வருத்தம் அளிப்பதாக கூறினார்.
தொடர்ந்து, விமான நிலையம் வந்த ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் கோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments