டி20 உலக கோப்பை கிரிக்கெட்: 55 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டி இங்கிலாந்து வெற்றி

0 2772

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றில் வெஸ்ட் இண்டிஸ் அணியை 55 ரன்களுக்குள் சுருட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 14 புள்ளி 2 ஓவர்களில் 55 ரன்களில் சுருண்டது. கிறிஸ் கெயிலை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். 20 ஓவர் கிரிக்கெட்டில் 3-வது குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவானது.

எளிய இலக்கை நோக்கிய களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 புள்ளி 2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments