நைஜீரியாவில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்... 800 கைதிகள் தப்பியோட்டம்

0 1958

நைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடினர்.

கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர ஆயதங்களுடன் சிறையை சுற்றிவளைத்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  குண்டுகளை கொண்டு சிறைச் சுவர்களை தகர்த்து 800 கைதிகளை மர்ம கும்பல் தப்பிக்க வைத்துள்ளது.

தப்பியவர்களில் 262 பேரை மீண்டும் கைது செய்துள்ளதாகவும், ஏறத்தாழ 575 பேரை தேடும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் 3-வது முறையாக சிறையை தகர்த்து கைதிகள் தப்பிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments