ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநரை மேடையில் ஏறி பளார் என்று அறைந்த நபர்

0 2289

ஈரானில் பதவியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்த கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநரை, மர்ம நபர் பளார் என்று அடித்த காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட அபிதின் கோரம் (()) பதியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்த நிலையில் மேடை ஏறிய மர்ம நபர் திடீர் தாக்குதல் தொடுத்தார். அவரது பின்னந்தலையில் பளார் என்று அடித்து சண்டையிட தொடங்கினார்.

பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர் அயுப் அலிசாதே (Ayub Alizadeh) என்பது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்ற போதும், தன் மனைவிக்கு ஆண் மருத்துவர் சிகிச்சை அளித்ததற்காக அவர்  கோபத்தில் இருந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments