ரஷ்யாவில் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா தொற்று புதிய உச்சம்

0 1797

ரஷ்யாவில் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா உயிரிழப்பு ஆயிரத்து 75 என்ற புது உச்சம் தொட்டுள்ளது.

வைரஸ் பரவல் எண்ணிக்கையும், 37 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த ரஷ்யாவிலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பரவலில் அதிகளவில் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தாமல் விட்டதே தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் முதன்முறையாக ரஷ்யாவில் தான் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டாலும், அங்கு மூன்றில் ஒருவருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments