காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்க விரும்புபவர்களை கடுமையாகக் கையாளுவோம் - அமைச்சர் அமித்ஷா

0 1468

3 நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு நிலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வெளி மாநில மக்களை குறிவைத்து  நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து 3 நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர்  சென்றுள்ள அமித்ஷா, பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவுக்கு நேரடி விமானசேவையைத் தொடங்கி வைத்தார். காஷ்மீர் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அமித்ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பயங்கரவாதம் குறைந்து வருவதாகவும், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசும் நிகழ்வுகள் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க விரும்புபவர்களை கடுமையாக கையாள்வோம் என்றும் எச்சரித்தார். காஷ்மீர் இந்தியாவின் இதயம் என்று குறிப்பிட்ட அமித்ஷா, காஷ்மீர் அமைதி, வளம், வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியரின் விருப்பம் என்று கூறினார். இதையடுத்து, அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல், பயங்கரவாதிகளுடனான நீண்ட காலம் நீடிக்கும் துப்பாக்கிச்சண்டை ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments