டி20 உலக கோப்பை : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

0 3785

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடக்கும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பயிற்சி ஆட்டத்தில் அடுத்தடுத்து 2 வெற்றி பெற்ற கையோடு இந்திய அணி, தனது முதல் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை என்ற மைல்கல்லை தக்கவைக்க இந்திய அணி முயற்சிக்கும்.

அதேநேரம் இந்தியாவுக்கு எதிரான தனது முதல் உலக கோப்பை வெற்றியை பெற பாகிஸ்தானும் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

முன்னதாக மாலை 3 முப்பது மணிக்கு ஷார்ஜாவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம், இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments