சீனாவில் பார்வை குறைபாடு உடையவர்களுக்காகப் பிரத்யேகத் திரையரங்கம்... மாற்றுத்திறனாளிகளும் திரைப்படங்களை ரசிக்க வாய்ப்பு!

0 1999

சீனாவில் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் திரைப்படங்களை ரசிப்பதற்காக பெய்ஜிங்கில் பிரத்யேக திரையரங்கம் இயங்கி வருகிறது.

சீனாவில் ஒரு கோடியே 70 லட்சம் பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் திரைப்படங்களை ரசிப்பதற்காக சின்மு திரையரங்கில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் பின்னனி குரல் மூலம் காட்சி வாரியாக விவரிக்கப்படுகின்றன.

கதை சொல்வதில் கைதேர்ந்த நபர் ஒருவர் திரைப்பட காட்சிகளை மட்டுமின்றி, நடிகர்களின் முக பாவனைகள் மற்றும் உணர்ச்சிகளைத் தத்ரூபமாக விவரிப்பதால் பார்வை குறைபாடு உடையவர்களுக்கும் திரைப்படத்தை பார்த்த அனுபவம் கிடைத்து விடுகிறது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments