உசிலம்பட்டியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த மூதாட்டியை ஏமாற்றி பணத்தை திருடி செல்ல முயன்ற பெண் கைது!

0 9540

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த மூதாட்டியை ஏமாற்றி பணத்தை திருடி செல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மிற்கு வந்த லிங்கம்மாள் என்ற மூதாட்டிக்கு, அங்கு பர்தா அணிந்தபடி நின்றுக்கொண்டிருந்த பெண், பணம் எடுத்துதருவதாக கூறி ஏடிஎம் கார்டை வாங்கி பின் நம்பரை கேட்டுள்ளார்.

அதன்பின், ஏடிஎம்மில் பணம் இல்லை என கூறி மூதாட்டியிடம் வேறு ஏடிஎம் கார்டை அப்பெண் மாற்றி கொடுத்துள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் கவனித்து மூதாட்டியிடம் கூறியதையடுத்து, பொதுமக்கள் அப்பெண்ணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அப்பெண் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரின் மகள் மணிமேகலை என்பதும், பல்வேறு இடங்களில் இதேபோன்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments