கன்னியாகுமரியில் நடுக்கடலில் விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் இரண்டு மீனவர்கள் படுகாயம்!

0 2098

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15-மீனவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த 2-மீனவர்கள் என 17 பேர் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 19 நாட்டிகல் மைல் தொலைவில் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பனாமா நாட்டு சரக்கு கப்பல் விசைப்படகு மீது மோதியதில் படகு சேதமடைந்து 2 மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். சக மீனவர்கள் வயர்லெஸ் மூலம் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த கடலோர காவல் படையினர் கடலில் தத்தளித்த 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments