அரியலூரில் 2 பள்ளி மாணவர்களின் முயற்சியால் டாஸ்மாக் கடை மூடல்!

0 2350

அரியலூர் மாவட்டம் அண்ணா நகரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இரண்டு பள்ளி  மாணவர்களின் முயற்சியால் மூடப்பட்டது.

அண்ணாநகர் பகுதியில் உள்ள நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளிக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து மது அருந்துவோர், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இடையூறு விளைவிப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட குறைத்தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த 2 பள்ளி மாணவர்கள், இந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கைப்பட எழுதி எடுத்து வந்த மனுவை ஆட்சியரிடம் வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர், டாஸ்மாக் கடை மூட வாய்மொழி உத்தரவிட்டார். இதனையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டன. 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments