ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் தமிழ் திரைப்படமான கூழாங்கல் பரிந்துரை

0 3182

டிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான 'கூழாங்கல்' திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. யோகிபாபு நடித்த மண்டேலா உள்ளிட்ட 14 திரைப்படங்களில் இருந்து ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வு குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில், அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க தேர்வாகியுள்ளது.

இத்திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் டைகர் விருது , மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா விருது , IFFSA டொரண்டோ விழா விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments