குடிபோதையில் விஐபி எஸ்கார்ட் வாகனத்தை அதிவேகமாக இயக்கிய காவலர் பணியிடை நீக்கம்

0 1888
குடிபோதையில் விஐபி எஸ்கார்ட் வாகனத்தை அதிவேகமாக இயக்கிய காவலர் பணியிடை நீக்கம்

சென்னை அரும்பாக்கத்தில் விஐபி எஸ்கார்ட் வாகனத்தை குடிபோதையில் அதிவேகமாக இயக்கிய காவலர் சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நேற்றிரவு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற இந்த வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது அரை நிர்வாண கோலத்தில் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்த காவலர் சரவணனை அரும்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு துணை ஆணையர் கோபால், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments