நவ.1 - மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது - தமிழக அரசு

0 6633

ழலையர் பள்ளிகள் நவம்பர் முதல் நாளில் திறக்கப்படாது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் முதல் நாளில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிளே ஸ்கூல் மற்றும் நர்சரி  பள்ளிகளும் அதே நாளில் திறக்கப்படும் என்றும் முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் முதல் நாளில் மழலையர் பள்ளிகள், குழந்தைகள் மையங்கள் திறக்கப்படாது என்றும், அவற்றைத் திறப்பது பற்றிப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அரசு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments