மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கவலை

0 2273
மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லையே என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவலை தெரிவித்துள்ளார்.

கோவை எரிபட்டியில் அமிர்தவல்லி என்பவரது நிலத்திற்கு செல்லும் வழியில் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி வழக்கு தாக்கலானது.

அப்போது கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதை பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கின்றனர் என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

எனினும் அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதி, மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments