மேட்டூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் வீடுகளிலும், பள்ளியிலும் புகுந்த மழைநீர்

0 3646

சேலம் மாவட்டம் மேட்டூரில் நேற்றிரவு கனமழை பெய்ததால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும், பள்ளியிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

மாதையன்குட்டை என்னும் பகுதியில் சாலையிலும் தெருக்களிலும் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இருசக்கர வாகனங்கள், கார்கள், கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் பழுதடைந்தன. இதே போல் மாதையன் குட்டை  அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கட்டடங்களைச் சுற்றியும் கட்டடத்துக்கு உள்ளேயும் மழைநீர் தேங்கியுள்ளது.

வடிகாலைச் சிலர் ஆக்கிரமித்துள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றித் தேங்கி நிற்பதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments