சமையல் எண்ணெய் மீதான விலை கூடுதலாக குறைய வாய்ப்பு - மத்திய அரசு

0 7861
சமையல் எண்ணெய் மீதான விலை கூடுதலாக குறைய வாய்ப்பு

எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்னெய் இருப்பு குறித்து அடுத்த வார இறுதிக்குள் மாநில அரசுகள் அறிவிக்கும் என்று நம்புவதாகவும், அதனால் சமையல் எண்ணெய் மீதான விலை கூடுதலாக குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மீதான மத்திய அரசின் இறக்குமதி வரிக் குறைப்பால், கடந்த செப்டம்பர் முதல் விலை குறைந்து வருவதாகவும், அதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் கடுகு கையிருப்பு 2 முதல் 3 சதவீதமாக குறைவு காரணமாக கடுகு எண்ணெய் விலை உயர்ந்து மற்ற எண்ணெய்களின் விலை உயர்வுக்கு காரணியாக இருந்ததாகவும் தெரிவித்தார். எண்ணெய் இருப்பு குறித்து மாநில அரசுகள் உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments