போதைப் பொருள் வழக்கில் தனது வாட்ஸ் அப் உரையாடல்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது ; ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான்

0 2699
போதைப் பொருள் வழக்கில் தனது வாட்ஸ் அப் உரையாடல்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது

போதைப் பொருள் வழக்கில் தனது வாட்ஸ் அப் உரையாடல்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறையில் இருக்கும் ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தனது செல்போனில் இருந்து சேகரித்த வாட்ஸ்-அப் உரையாடல்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது வாட்ஸ்-அப் உரையாடல்களுக்கு அதிகாரிகள் கொடுக்கும் விளக்கம் கற்பனையாகும் என்றும் இத்தகைய விளக்கங்கள் தவறானது மற்றும் நியாயமற்றதுஎனவும் ஆர்யன் கான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வரும் 26ம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments