காரைக்காலில் பாமக மாவட்ட செயலாளர் அரிவாளால் வெட்டிக் கொலை

0 3545
காரைக்காலில் பாமக மாவட்ட செயலாளர் அரிவாளால் வெட்டிக் கொலை

 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே பாமக மாவட்ட செயலாளர் தேவமணியை, முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருநள்ளாறை சேர்ந்த தேவமணிக்கும் அப்பகுதியில் உள்ள சிலருக்கும் அரசியல் மற்றும் நிலப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு திருநள்ளாறு கடைவீதியில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த தேவமணியை வழிமறித்த 6க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த தேவமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால் திருநள்ளாறு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments