லாரியும், மினி லாரியும் மோதி தீ விபத்து ; ஓட்டுநர் உடல் கருகி பலி

0 2252
லாரியும், மினி லாரியும் மோதி தீ விபத்து ; ஓட்டுநர் உடல் கருகி பலி

கடலூர் மாவட்டத்தில் லாரியும், மினி லாரியும் மோதி தீப்பிடித்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.

சிறுபாக்கம் அடுத்த அரசங்குடி சோதனைச் சாவடி அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் பின் பக்கம் மினி லாரி மோதியது. இந்த விபத்தில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் இதனை ஓட்டி வந்த ஓட்டுநர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த சிறுபாக்கம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயில் கருகி உயிரிழந்த ஓட்டுநர் யார் என்பது குறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments