பழுதான மின் தூக்கியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய ஊழியர்கள் ; பாதுகாப்பாக மீட்ட சி.ஐ.எஸ்.எப் வீரர்கள்

0 1793
பழுதான மின் தூக்கியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய ஊழியர்கள் ; பாதுகாப்பாக மீட்ட சி.ஐ.எஸ்.எப் வீரர்கள்

மத்திய பிரதேச மாநிலம் வித்யாச்சல் அனல் மின் நிலையத்தில் பழுதான மின் தூக்கியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய 2 ஊழியர்களை சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் மீட்டனர்.

அனல் மின் நிலையத்தின் சிம்மினிக்கு செல்லும் மின் தூக்கியில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு 50 அடி உயரத்தில் சிக்கிக் கொண்டது. அந்தரத்தில் தொங்கிய மின் தூக்கியில் 2 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த மத்திய தொழில்த்துறை பாதுகாப்பு படை வீரர்கள் கயிறு கட்டி இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments