அமித் ஷா காஷ்மீர் பயணம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

0 2074
3 நாள் சுற்றுப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் பயணம்

3 நாள் பயணமாக காஷ்மீர் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா மற்றும் மூத்த அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

ஸ்ரீநகரில் முதல் நிகழ்ச்சியாக ஸ்ரீநகரில் நடந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். அதில் ராணுவ, போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஜம்மு-காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் கொல்லப்படுவதை தடுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் அமித் ஷா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன்பின் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வேஸ் அகமதுவின் குடும்பத்தினரை சந்தித்து அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார். பர்வேஸ் அகமதுவின் மனைவிக்கு அரசு வேலை வழங்குவதற்கான உத்தரவை அவர் வழங்கினார்.

ஸ்ரீநகர்-ஷார்ஜா இடையிலான முதலாவது சர்வதேச விமானத்தையும் இன்று மாலை அமித் ஷா துவக்கி வைக்கிறார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது அரசியலமைப்புப் பிரிவு 2019 ல் ரத்து செய்யப்பட்டு அது இரண்டு ஒன்றிய ஆட்சிப்பகுதிகளாக பிரிக்கப்பட்ட பிறகு அமித் ஷா முதன்முறையாக காஷ்மீர் வந்துள்ளார்.

எனவே அங்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப்-ன் 50 குழுக்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸார் டிரோன்களை பயன்படுத்தி கண்காணிப்பை உறுதிப் படுத்தினர்.

அமித் ஷா தங்கியுள்ள ஆளுநர் மாளிகையை சுற்றிலும் 20 கிலோ மீட்டர் அளவிற்கு பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments