பெண்ணை தாக்கிவிட்டு செயின் பறிப்பு ; திருடனை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி

0 2402
பைக்கில் சென்றவர்களை விரட்டிப் பிடித்து அடித்த பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் பெண்ணைத் தாக்கிவிட்டு, செயின் பறித்துச் சென்ற இருவரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கி பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

சிஎஸ்ஐ கோயில் தெருவை சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் மெயின் பஜார் வழியாக நடந்து சென்று கொண்டிருந்ததார். திடீரென்று பதிவு எண் இல்லாத கருப்பு நிற பல்சர் பைக்கில் வந்த மர்ம நபர்களில் ஒருவன் அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பிடித்து இழுத்துள்ளான்.

புஷ்பலதா செயினை பிடித்துக் கொண்டு சத்தம் போடவே, அந்த நபர் அவரது கழுத்தை நெரித்து, இரண்டு கன்னங்களிலும் அடித்து செயினை பறித்து கொண்டு கூட்டாளியுடன் பைக்கில் ஏறி தப்பியுள்ளான்.

புஷ்பலதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பைக்கை விரட்டிச் சென்று மடக்கி, இருவரையும் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments