கழுத்துப் பகுதியில் நாய் கடித்ததால் 6 வயது சிறுவன் உயிரிழப்பு ; அரசு மருத்துவமனையின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

0 2333
கழுத்துப் பகுதியில் நாய் கடித்து உயிரிழந்த 6 வயது சிறுவன்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கழுத்தில் நாய் கடித்து 6 வயது சிறுவன் இறந்த நிலையில், அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என உறவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பாலகேஷ்வரன் என்ற அந்த சிறுவன், கடந்த 6ஆம் தேதி வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் ஒன்று துரத்திச் சென்று அவனது கழுத்தில் கடித்துள்ளது.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு முதல் கட்ட தடுப்பூசிகளை போட்டு தேவதானபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு 3 தடுப்பூசிகள் போட்ட பின்பும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கழுத்து பகுதியில் பலத்த காயம் இருந்த நிலையில் ஐசியுவில் வைத்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கக் கேட்டதாகவும் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுவாக முகம் , அல்லது முகத்தின் அருகே நாய்கள் கடித்தால் அதிக ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments