தனியாக இருக்கும் பெண்களே குறி.. மயக்க மருந்தை தூவிய இருவரை வெளுத்த பொதுமக்கள்..!

0 8629

நாமக்கல் அருகே பூஜிக்கப்பட்ட சாமி தகடுகள், புடவை, ஊதுப்பத்திகள் எனக் கூறி, 500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்க முயன்றதாகக் கூறப்படும் 2 பேரை அடித்து, உதைத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

கொண்டிச்செட்டிப்பட்டி மற்றும் தில்லைநகர் பகுதிகளில் கடந்த 5ஆம் தேதி 2 பேர் சாமி உருவங்கள் பதித்த தகடுகள், புடவை, ஊதுபத்திகள் உள்ளிட்டவற்றை ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து, பூஜிக்கப்பட்ட பொருட்கள் எனக் கூறி அவர்கள் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நிலையில், இன்று மீண்டும் அவர்கள் அப்பகுதிக்கு விற்பனைக்காகச் சென்றுள்ளனர்.

500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி ஆயிரத்து 500 ரூபாய்க்கு அவர்கள் விற்பறுள்ளதாகவும், பெண்கள் மீது ஒருவித மயக்க மருந்தையும் அவர்கள் தூவியதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சேலத்தைச் சேர்ந்த முகம்மது அலி மற்றும் இர்பான் என்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments